நெகிழி பைகளானவை எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு நெகிழி பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் நெகிழியானது கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.
நெகிழி என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக் கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.
நெகிழி வகைகள் தயாரிப்பு
1.அதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள்
எ.கா : குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டில்கள்,
2. குறைந்த அளவு அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள்
எ .கா : கேரி பைகள்.
3.பாலி எத்திலின் டெரித்தாலேட்
எ .கா : குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள்.
4.பாலிப்பிரோப்பலின்
எ .கா குளிர்பானம் உறிஞ்சும் குழாய்கள்.
5.பாலிசிஸ்ட்ரேன்
எ .கா உணவு பொருட்கள், நுரையணித் துணிகள் போன்ற பேக்கிங்கள்.
6.பாலிவினைல் குளோரைட்
எ .கா மின்சார காப்பர் ஒயர்கள்.
7.அக்ரிலோ - ஹைட்ரேட் பூட்டிடேன் சிஸ்ட்ரேன்
எ .கா மிகவும் கடினமான பொருட்கள் தயாரிப்பு மற்றும் கார் வாகனங்கள் பொருட்கள் தயாரிப்பு.
8.பாலி கார்பனேட் - பிளாஸ்டிக்
எ .கா குறுந்தகடு) போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.
பிளாஸ்டிக்கின் பயன்பாடு
பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. இவை காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேனீர் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக்கின் தீமைகள்
பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.
வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.
நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.
நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.
பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.
கடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்
நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.
மனிதன் இயற்கையை மறந்து செயற்கையை தேடல்
மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதும் துணிப்பைகளில் தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். பித்தளை, சில்வர் போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. இந்த பிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது.
பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் (100-1000 ஆண்டுகள்)
பஞ்சுக் கழிவுகள் (1-5 மாதங்கள்)
காகிதம் (2-5 மாதங்கள்)
உல்லன் சாக்ஸ் (1-5ஆண்டுகள்)
டெட்ரா பேக்குகள் (5ஆண்டுகள்)
தோல் காலணி (25-40 ஆண்டுகள்)
டயபர் நாப்கின் (500-800 ஆண்டுகள்)
பிளாஸ்டிக்கை தவிர்த்தல்:
மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்து கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது தனியரு சேமிப்பு துணிப்பையை வைத்துக் கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
காப்பர் ஒயர்கள் போன்றவைகளை கண்ட இடத்தில் எரித்தல் கூடாது.
பிளாஸ்டிக் மறுசுழற்சி மறு பயன்பாடு
பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள், தொழிற்சாலை லைனர்கள், சுருள்கள், வணிகக் குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளை உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.
இப்பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்தல் பயனற்றதாக உள்ளன. ஒரு பிளாஸ்டிக் பைகளின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடம் மட்டுமே ஆனால் மட்குவதற்கு ஆகும் காலம் அதிகம். பிளாஸ்டிக் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மட்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும்.
கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90% பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களே காணப்படுகின்றன.
தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் தனக்கென பிளாஸ்டிக் தவிர்ப்பு முறைகளை வைத்துக் கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியும் என்று நம்முடைய எண்ணம் உருவாக வேண்டும்.
பிளாஸ்டிக்கை தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.
பிளாஸ்டிக் இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும் தனக்கொரு உறுதிமொழியை ஏற்படுத்தி கொள்ளுதல்
மறுசுழற்சி
புதிதாக அமைக்கப்படும் சாலை முழுவதும் பிளஸ்டிக் கொண்டு அமைத்தல்.
No comments:
Post a Comment